வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 31 மே 2023 (17:01 IST)

தோனி வருங்காலத்தில் அரசியல் தலைவராவார்..! தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா

Anand Mahindra
தோனி வருங்காலத்தில் அரசியல் தலைவர் ஆவார் என பிரபல தொழில் அதிபர் ஆனந்த் மகேந்திரா தெரிவித்துள்ளார். 
 
தல தோனி தற்போது அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றுள்ள நிலையில் ஐபிஎல் போட்டிகளில் மற்றும் விளையாடி வருகிறார். அனேகமாக அவர் இந்த ஆண்டுடன் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற தோனி தற்போது விவசாயம் செய்து வருகிறார் என்பதும் அவரது பண்ணைகளில் விளையும் பொருட்கள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் அரசியலில் தோனி களமிறங்குவது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என தொழில் அதிபர் ஆனந்த் மகேந்திரா தெரிவித்துள்ளார். என்சிசி தொடர்பான ஆய்வு குழுவில் அவருடன் பணியாற்றி உள்ளேன் என்றும் ஆடுகளத்தில் எவ்வளவு தீவிரமாக இருப்பாரோ அதே அளவுக்கு அவர் அறிவார்ந்த சிந்தனையுடனும் இருப்பதை நான் உணர்ந்தேன் என்றும் ஆனந்த் மகேந்திரா தெரிவித்துள்ளார் 
 
புதுமையான விஷயங்களை செய்வதில் அவர் ஆர்வமாக இருப்பவர் என்பதால் நிச்சயம் அவர் வருங்காலத்தில் ஒரு தலைவராக திகழ்வார் என்றும் ஆனந்த் மகேந்திரா தெரிவித்துள்ளார்.
 
 
Edited by Siva