வெள்ளி, 1 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 23 செப்டம்பர் 2023 (12:47 IST)

உலகக் கோப்பை தொடருக்கான விசா வழங்குவதில் தாமதம்... பாகிஸ்தான் அணி பயணத்தில் தடங்கல்!

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5ம் தேதி முதல் இந்தியாவில் நடைபெற உள்ளது. இதற்கான அணி வீரர்கள் தேர்வு குறித்து பெரும் எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது. இந்த முறை முழு உலகக் கோப்பை தொடரும் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே நடக்கின்றன.

இந்நிலையில் இந்த தொடரில் கலந்துகொள்ளும் அணிகளில் பாகிஸ்தான் தவிர மற்ற அனைத்து அணிகளுக்கும் இந்தியாவுக்கு வர விசா வழங்கப்பட்டு விட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் பாகிஸ்தான் அணியினருக்கு இன்னும் விசா அளிக்கப்படவில்லை என்பதால் அந்த அணியின் பயணத் திட்டம் மாற்றத்துக்குள்ளாகியுள்ளது.

திங்கள் கிழமை துபாய் சென்று அங்கு இரண்டு நாட்கள் தங்கிய பிறகு புதன் கிழமை ஹைதராபாத்துக்கு வருவதற்கு பாகிஸ்தான் அணி திட்டமிட்டு இருந்தது. ஐதராபாத்தில் நியுசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக இரண்டு பயிற்சி ஆட்டங்களில் ஆடுவதாக இருந்தது. ஆனால் இப்போது விசா கிடைப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக அவர்களின் பயணத்திட்டத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.