ஞாயிறு, 3 டிசம்பர் 2023
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (21:08 IST)

1 st ODI: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெற்றியை நோக்கி இந்திய அணி....

india -australia
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள  ஆஸ்திரேலியா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.

இன்று இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடந்து வருகிறது.

இன்றைய போட்டியில்   முதலில் பேட்டிங் செய்த வார்னர் 52 ரன்னும், மார்னஸ் 39 ரன்னும், கிரீன் 31 ரன்னும், ஜோஸ் 45 ரன்னும் அடித்தனர். எனவே 0 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 276  ரன்கள் அடித்தது.

இந்திய அணி சார்பில் ஷமி 5 விக்கெட் கைப்பற்றினார்.

இதையடுத்து, இந்திய அணி 277 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி விளையாடி வருகிறது.

இதில், தொடக்க வீரர்கள் ருத்துராஜ்(71), சுப்மன் கில்(74) அதிரடியாக விளையடி  ரன்கள் குவித்தனர். அதன்பின்னர்,  ஸ்ரேயாஸ் அய்யர் 3 ரன்னும், கிஷான் 18 ரன்னும், அடித்தனர். கே.எல்.ராகுல் 230   ரன்னும்,  சூர்யகுமார் 30 ரன்னுடன் விளையாடி வருகின்றனர்.

எனவே இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 40.4  ஓவரில் 227  ரன்கள் அடித்துள்ளது.