வியாழன், 29 பிப்ரவரி 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (08:08 IST)

சனாதன தர்மம் குறித்த சர்ச்சை பேச்சு.. உதயநிதிக்கு எதிரான மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை..!

உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் நடந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை அடுத்து இந்த கூட்டத்தில் இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர் பாபு கலந்து கொண்டதை அடுத்து இருவர் மீதும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 
 
சனாதன தர்ம குறித்த சர்ச்சை பேச்சு வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
நீதிபதிகள் அனிருத்தா போஸ் மற்றும் பேலா எம் திரிவேதி அமர்வு இன்று விசாரணை செய்கிறது. இன்றைய விசாரணையின் போது அமைச்சர் உதயநிதி சாலை மற்றும் அமைச்சர் சேகர் பாபு எதிராக ஏதேனும் உத்தரவு பிறப்பிக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்
 
Edited by Siva