சனி, 23 செப்டம்பர் 2023
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 5 செப்டம்பர் 2022 (13:44 IST)

எல்லைத் தாண்டி உனக்காக வந்தேனே! – கோலிக்கு ஆதரவளித்த பாகிஸ்தான் பெண்!

Pakistan Girl
நேற்றைய ஆசியக்கோப்பை போட்டியில் கோலிக்கு ஆதரவாக பாகிஸ்தான் பெண் ஒருவர் போர்டு பிடித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஆசியக்கோப்பை டி20 போட்டியில் நேற்று இந்தியா – பாகிஸ்தான் இடையே இரண்டாவது போட்டி நடந்தது. இந்த போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணியை பாகிஸ்தான் வென்றது.

கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடாத கோலி இந்த ஆட்டத்தில் தனது பழைய ஃபார்முக்கு திரும்பி அசகாயமாக ரன்களை குவித்தார். இதனால் கோலி ரசிகர்கள் மிகவும் உற்சாகமடைந்தனர். 44 பந்துகளில் 60 ரன்களை விராட் கோலி குவித்தார்.

அப்போது விராட் கோலிக்கு ஆதரவாக பாகிஸ்தான் பெண் ஒருவர் “நான் கோலிக்காகதான் இங்கே வந்தேன்” என்று எழுதிய பலகையை பிடித்தபடி நின்றார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகியுள்ள நிலையில் எல்லைகள் தாண்டி கோலிக்கு பாகிஸ்தானிலும் உள்ள ரசிகர்களை குறித்து பலரும் வியந்து பதிவிட்டு வருகின்றனர்.