வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: சனி, 16 நவம்பர் 2024 (11:11 IST)

டி 20 கிரிக்கெட் வரலாற்றிலேயே யாரும் படைக்காத சாதனையைப் படைத்த சஞ்சு சாம்சன்!

இந்திய கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இடம்பிடிக்க கடந்த சில ஆண்டுகளாக போராடி வருகிறார். ஆனால் அவருக்கு போட்டியாக ரிஷப் பண்ட், இஷான் கிஷான் மற்றும் கே எல் ராகுல் ஆகியோர் இருக்கின்றனர். ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தலைமையேற்று வழிநடத்தும் சஞ்சு, இப்போதுதான் இந்திய அணியில் தன்னுடைய இடத்தை நிரந்தரமாக்கியுள்ளார்.

இந்நிலையில்தான் வங்கதேசத்துக்கு டி 20 போட்டியில் அவருக்கு இடம் கிடைத்து சதமடித்து அசத்தினார். அதன் பின்னர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியிலும் அவர் சதமடித்தார். அதே தொடரின் நான்காவது போட்டியில் நேற்று சதமடித்தார்.

இப்படி ஒரே ஆண்டில் மூன்று சர்வதேச டி 20 சதங்களை அடித்து சாதனைப் படைத்துள்ளார் சஞ்சு சாம்சன். இதுவரை ஐந்துவீரர்கள் ஒரே ஆண்டில் 2 டி 20 சதங்களை அடித்துள்ளனர். ஆனால் சஞ்சு சாம்சன் முதல்முறையாக ஒரே ஆண்டில் மூன்று சதங்களை அடித்துள்ளார். அதையும் ஒருமாத காலத்துக்குள் அவர் நிகழ்த்தியுள்ளார்.