செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 16 நவம்பர் 2024 (11:07 IST)

ரோஹித் ஷர்மா-ரித்திகா தம்பதிக்கு ஆண்குழந்தை பிறந்தது…!

நியுசிலாந்து அணிக்கு எதிரான வொயிட்வாஷ் தோல்வியால் இந்திய அணி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. இதனால் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு செல்வதில் சிக்கல் உருவாகியுள்ளது. அப்படி ஒரு முக்கியத்துவம் உள்ள தொடரின் முதல் போட்டியில் விளையாடுவது இதுவரை உறுதியாகவில்லை.

அவர் மனைவியின் பிரசவத்துக்காக அவர் இந்தியாவிலேயே தங்கினார். இந்நிலையில் இப்போது ரோஹித் ஷர்மா ரித்திகா தம்பதியினருக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து ரசிகர்கள் சமூகவலைதளங்கள் மூலமாக அவர்களுக்கு வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 22 ஆம் தேதி தொடங்குவதால் ஆஸ்திரேலியாவுக்கு சென்று அதில் ரோஹித் கலந்துகொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.