தொடர்புடைய செய்திகள்
- அடுத்த ஆண்டில் ஆர்சிபிக்கு கப் உறுதி? கேப்டனாகும் கே.எல்.ராகுல்! - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
- கோலிதான் பெஸ்ட் ப்ரண்ட்… காயத்தில் இருக்கும் போது அவர் வெளிப்படுத்திய அன்பு – ஷமி பகிர்ந்த தகவல்!
- RCB அணியில் தனிப்பட்ட வீரர்களுக்கே முக்கியத்துவம்... அதனால்தான் இன்னும் கோப்பை வெல்லவில்லை - பார்த்திவ் படேல்!
- ஐபிஎல் டெல்லி அணி பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் நீக்கம்.. என்ன காரணம்?
- ஷமி ஒன்றும் இளம் வீரர் இல்லை.. அணியில் இனி அவர் ரோல் என்ன?- முன்னாள் பயிற்சியாளர் கேள்வி
ஒரு கிரிக்கெட்ட் வீரர் எப்போது ஓய்வுபெறவேண்டும்?.. ஷமியிடம் கூறிய தோனி!
கடந்த ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக மிகச்சிறப்பான பங்களிப்பைக் கொடுத்தவர் முகமது ஷமி. ஆனால் அதன் பின்னர் காயம் காரணமாக அவர் கிரிக்கெட்டில் இருந்து சில மாதங்கள் விலகி சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.
கணுக்கால் காயம் காரணமாக அவதிப்படும் அவருக்கு லண்டனில் ஜனவரி மாதம் ஊசி மூலமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அவரது காயத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் இல்லை என்பதால் அவருக்கு கனுக்காலில் அறுவை சிகிச்சை லண்டனில் நடந்தது. அதையடுத்து இப்போது அவர் காயத்தில் இருந்து மீண்டெழுந்து வருகிறார். இந்நிலையில் அவர் விரைவில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மீண்டும் இந்திய அணிக்குத் திரும்புவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த ஒரு நேர்காணலில் பல சுவாரஸ்யமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்துள்ளார். அதில் “ஒரு கிரிக்கெட் வீரர் எப்போது ஓய்வு பெற வேண்டும் என நான் ஒருமுறை தோனியிடம் கேட்டேன். அதற்கு அவர் “முதலில் கிரிக்கெட் உனக்கு சலிப்பை ஏற்படுத்துகிறது என்றால் நீ ஓய்வை அறிவித்துவிடவேண்டும். இன்னொன்று உன்னை அணியில் இருந்து வெளியில் அனுப்பிவிடுவார்களோ என தோன்றினால் நீ ஓய்வை அறிவித்து விடவேண்டும் எனக் கூறினார்” என தெரிவித்துள்ளார்.