1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 23 அக்டோபர் 2024 (08:06 IST)

இந்திய அணியின் பிட்டெஸ்ட் வீரர்கள் இவர்கள்தான்… முகமது ஷமி பதில்!

காயத்தினால் அவதிப்படும் ஷமி, கிரிக்கெட்டில் இருந்து சில மாதங்கள் விலகி சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். கணுக்கால் காயம் காரணமாக அவதிப்படும் அவருக்கு லண்டனில் ஜனவரி மாதம் ஊசி மூலமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அவரது காயத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் இல்லை என்பதால் அவருக்கு கனுக்காலில் அறுவை சிகிச்சை லண்டனில் நடந்தது.

இதற்கிடையில் சிகிச்சையில் குணமாகி வந்த அவருக்கு மீண்டும் முழங்காலில் வீக்கம் ஏற்பட அவர் சர்வதேசக் கிரிக்கெட்டுக்கு திரும்புவதில் தாமதம் ஏற்படும் என சொல்லப்பட்டது. ஆனால் இப்போது அவர் மீண்டும் பவுலிங் பயிற்சியை தொடங்கியுள்ளார். அதனால் அவர் ஆஸி தொடரில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அவர் இந்திய அணியில் பிட்டான வீரர்கள் பற்றி பேசியுள்ளார். அதில் “இந்திய அணியில் பிட்னெஸ் பற்றி பேசினால் விராட் கோலியை முதலிடத்தில் வைக்கவேண்டும். ஆனால் இப்போது நிறைய வீரர்கள் வந்துவிட்டார்கள். ஷுப்மன் கில், ரவீந்தர ஜடேஜா மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள். வேகப்பந்து வீச்சாளர்கள் எப்போதுமே பலமானவர்கள். ஆனால் இப்போது அணிக்குள் பல வீரர்கள் பிட்னெஸ் குறித்து அதிகமாக அக்கறை எடுத்துக் கொள்கின்றனர்” எனக் கூறியுள்ளார்.