தொடர்புடைய செய்திகள்
- ஷமி ஆஸ்திரேலியா சீரிஸில் விளையாடுவாரா?... ரோஹித் ஷர்மா அளித்த பதில்.!
- தோனிக்காகதான் அன்கேப்ட் ப்ளேயர் விதி கொண்டுவரப் பட்டதா?... ஐபிஎல் தலைவர் பதில்!
- கோலி இன்னும் பசியோடுதான் இருக்கிறார்… கம்பீர் நம்பிக்கை!
- எக்கமா.. எக்கச்சக்கமா.. Heart Beat-தான் ஏறுதே! - வைரலாகும் தல தோனியின் New Look!
- ரோஹித் ஷர்மா ஏலத்துக்கு வந்தால் இதுதான் நடக்கும் -ஹர்பஜன் சிங் பதில்
ஹென்ரிச் கிளாசனுக்கு இத்தனைக் கோடியா?... சன் ரைசர்ஸ் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியல்!
ஐபிஎல் அடுத்த சீசனுக்கு ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களைத் தக்கவைக்கலாம் என்ற புதிய விதிகளை பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி ஒரு அணி அதிகபட்சமாக 6 வீரர்கள் வரை தக்கவைத்துக் கொள்ளலாம். அதில் அதிகபட்சமாக 5 பேர் சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர்களாக இருக்கலாம். அதே போல அன்கேப்ட் வீரர்களாக அதிகபட்சம் 2 பேர் இருக்கலாம்.
வீரர்களை ரிடென்ஷன் மற்றும் RTM ஆகிய முறைகளில் அணிகள் தக்கவைக்கலாம். ஒரு அணி ஒரே ஒரு வீரரை மட்டுமே ரிடென்ஷன் முறையில் தக்கவைக்கிறது என்றால் ஏலத்தில் 5 வீரர்களை RTM முறையில் தக்கவைக்கலாம்.
இந்நிலையில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி தங்கள் அணியில் தக்க வைக்கப் போகும் மூன்று வீரர்களுக்கான உத்தேச பட்டியலை முடிவு செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி ஹென்ரிச் கிளாசனை 23 கோடி ரூபாய்க்கும், பேட் கம்மின்ஸை 18 கோடி ரூபாய்க்கும், அபிஷேக் சர்மாவை 14 கோடி ரூபாய்க்கும் தக்கவைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் டிராவிஸ் ஹெட் மற்றும் நிதிஷ்குமார் ஆகியோரையும் தக்க வைக்க முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.