வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : ஞாயிறு, 20 அக்டோபர் 2024 (07:56 IST)

RCBக்கு விளையாட சொல்லி கோரிக்கை வைத்த ரசிகர்.. ரோஹித் ஷர்மாவின் ரியாக்‌ஷன்!

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் ஷர்மாவைக் கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது. 10 ஆண்டுகளுக்கு மேல் அந்த அணிக்குக் கேப்டனாக இருந்த ரோஹித் 5 முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார். இப்படிப்பட்ட நிலையில் திடீரென அவரைக் கேப்டன் பதவியில் இருந்து நீக்கியதில் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களே அதிருப்தி அடைந்தனர். அதனால் அடுத்த சீசனில் ரோஹித், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட மாட்டார் என்று தெரிகிறது.

இந்நிலையில் அவர் ஏலத்துக்கு வந்தால் அவரை எந்த அணி வாங்கப் போகிறது என்பதைப் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். அவர் லக்னோ அணிக்குக் கேப்டனாக நியமிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. ஆனால் இதுவரை எல்லாமே ஊகங்களாகவே உள்ளது.  இந்நிலையில் பெங்களூர் டெஸ்ட் போட்டியின் போது பெவிலியனில் நடந்துகொண்டிருந்த ரோஹித் ஷர்மாவிடம் ரசிகர் ஒருவர் இது சம்மந்தமாகப் பேசிய உரையாடல் கவனம் ஈர்த்துள்ளது.

அந்த உரையாடலில்..

ரசிகர்: ரோஹித் பாய் ஐபிஎல் மேட்ச்ல எந்த அணிக்காக விளையாடப் போறீங்க?
ரோஹித்: எந்த அணிக்காக விளையாடணும்?
ரசிகர் : RCB க்காக ஆடுங்க..
இதைக் கேட்ட ரோஹித் ஷர்மா எந்த பதிலும் சொல்லாமல் நடந்து சென்றுவிட்டார்.