திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 21 அக்டோபர் 2024 (16:17 IST)

ஐபிஎல் மெஹா ஏலம் நடப்பது எங்கே? எப்போது? – வெளியான தகவல்!

இந்த ஆண்டு இறுதியில் நடக்கும் மெகா ஏலத்துக்கு முன்பாக பிசிசிஐ புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி ஒரு அணி அதிகபட்சமாக 6 வீரர்கள் வரை தக்கவைத்துக் கொள்ளலாம். அதில் அதிகபட்சமாக 5 பேர் சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர்களாக இருக்கலாம். அதே போல அன்கேப்ட் வீரர்களாக அதிகபட்சம் 2 பேர் இருக்கலாம்.

வீரர்களை ரிடென்ஷன் மற்றும் RTM ஆகிய முறைகளில் அணிகள் தக்கவைக்கலாம். ஒரு அணி ஒரே ஒரு வீரரை மட்டுமே ரிடென்ஷன் முறையில் தக்கவைக்கிறது என்றால் ஏலத்தில் 5 வீரர்களை RTM முறையில் தக்கவைக்கலாம். இதன்படி அணிகள் தங்கள் அணியில் தக்கவைக்கும் வீரர்களுக்கான ஊதியம் எவ்வளவு கொடுக்கவேண்டும் என்பது பற்றியும் பரிந்துரைகளைக் கொடுத்துள்ளது.

இந்நிலையில் ஐபிஎல் ஏலம் வரும் நவம்பர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சவுதி அரேபியாவில் நடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இந்த ஐபிஎல் ஏலம் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகவுள்ளது.