1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 16 செப்டம்பர் 2023 (07:39 IST)

மேக்ஸ்வெல் தம்பதியினருக்கு ஆண்குழந்தை.. ரசிகர்கள் வாழ்த்து!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல்ரவுண்டரான கிளன் மேக்ஸ்வெல் சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட வினி ராமனைக் கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

ஆஸ்திரேலியாவில் பார்மஸி படிப்பு படித்து வந்த வினி ராமன், கடந்த சில ஆண்டுகளாக மேக்ஸ்வெல்லை காதலித்து வந்ததாகவும் இதனை அடுத்து இவரது பெற்றோர்கள் சம்மதத்துடன் நடக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

இவர்களின் திருமணம் இருவரின் முறைப்படியும் நடந்தது. இந்நிலையில் இப்போது இந்த தம்பதியினருக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு லோகன் மேவ்ரிக் மேக்ஸ்வெல் எனப் பெயர் வைத்துள்ளனர். இதையடுத்து மேக்ஸ்வெல் தம்பதியினருக்கு ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.