திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : ஞாயிறு, 3 செப்டம்பர் 2023 (00:10 IST)

சீமானை கைது செய்ய விரைந்த தனிப்படை போலீஸார்?

viyalakshmi -seeman
சீமான் மீது நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரை கைது செய்ய தனிப்படை போலீஸார் விரைந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

கடந்த 2011ம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி சென்னை வளசரவாக்க காவல்  நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகார் தொடர்பாக, சீமான் மீது  நடவடிக்கை எடுக்க போலீஸார் தயாராகி வருவதாக தகவல் வெளியாகிறது.

இந்த நிலையில், சீமான் மீது கொடுத்த புகார் தொடர்பாக விஜயலட்சுமி இன்று இரண்டாவது நாளாக துணை ஆணையர்  விசாரணை மேற்கொண்டார்.

நேற்று திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜராகி வாக்குமூலம் கொடுத்த  நிலையில், இன்று மதுரவாயில் காவல் நிலையத்தில் தொடர்ந்து அவரிடம் 4 மணி  நேரம் விசாரணை நடைபெற்றது. அதன்பின்னர்  நடிகை விஜயலட்சுமி சிரித்த முகத்துடன் வெளியே வந்தார்.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்ய தனிப்படை போலீஸார் உதகைக்கு விரைந்துள்ளதாக தகவல் வெளியாகிறது.

திருவள்ளூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் விஜயலட்சுமி வாக்குமூலம் அளித்த நிலையில்  5 பேர் கொண்ட தனிப்படை போலீஸார் விரைந்துள்ளனர்.