வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 5 செப்டம்பர் 2023 (13:06 IST)

விரதம் இருந்தும் திருமணம் ஆகவில்லை.. கோபத்தில் சிவலிங்கம் சிலையை திருடிய வாலிபர் கைது..!

திருமணமாக வேண்டும் என்பதற்காக சிவலிங்கம் சிலை முன் விரதம் இருந்ததாகவும் ஆனால் விரதம் இருந்தும் தனக்கு திருமணம் ஆகவில்லை என்பதால் கோபத்தால்  சிவலிங்கம் சிலையை வாலிபர் ஒருவர் திருடி சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. 
 
உ.பியில் புகழ் பெற்ற பைரோ பாபா எனும் சிவன் கோவில் உள்ளஊ. இந்த கோவிலில் உள்ள சிவலிங்கம் சிலை முன் தனக்கு திருமணமாக வேண்டும் என்று சோட்டு என்ற வாலிபர் தினமும் விரதம் இருந்து வழிபாடு செய்துள்ளார். 
 
ஆனால் மாத கணக்கில் விரதம் இருந்தும் தனக்கு திருமணம் ஆகாதுதால் கோபத்தில் சிவலிங்கம் சிலையை அவர் திருடியதாக தெரிகிறது. இதனை அடுத்து அந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
 
தனக்கு திருமணமாக வேண்டி தினமும் விரதமிருந்து வழிபாடு செய்தும் திருமணமாகாததால் கோபத்தில் சிவலிங்கத்தை திருடியதாக பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனை அடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்
 
Edited by Mahendran