பணத்தால் விஸ்வாசத்தை விலைக்கு வாங்க முடியாது… சிஎஸ்கே வீரரின் இன்ஸ்டா பதிவால் பரபரப்பு!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் பதிரனா கிட்டத்தட்ட மலிங்கா போலவே பந்துவீசி, விக்கெட்களை வீழ்த்தி வருகிறார். அவர் மேல் தோனி அளவுக்கதிமாக நம்பிக்கை வைத்துள்ளார். அவர் பற்றி பேசிய தோனி “பதீரனா இலங்கை அணியின் சொத்து. அவர் சிவப்பு பந்து கிரிக்கெட்டை அதிக விளையாடக் கூடிய நபர் இல்லை. வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் கூட அவர் ஒருநாள் போட்டிகள் பக்கம் செல்லக் கூடாது” எனக் கூறியிருந்தார்.
சிஎஸ்கே அணிக்காக சிறப்பாக விளையாடினாலும், இலங்கை அணிக்காக பதிரனா இன்னும் தன்னுடைய சிறப்பான பவுலிங்கை கொடுக்கவில்லை. நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரிலும் அவர் மோசமாகதான் பந்துவீசினார்.
இந்நிலையில் இப்போது ஐபிஎல் ஏலம் நெருங்கி வரும் நிலையில் அனைத்து ஐபிஎல் அணிகளும் தங்கள் அணியில் தங்க வைக்கப்பட்டுள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன. அதில் சிஎஸ்கே அணியால் பதிரனா தக்கவைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் “பணத்தால் விஸ்வாசத்தை விலைக்கு வாங்க முடியாது” எனக் கூறியுள்ளார். இதன் மூலம் அவரை ஏதோ ஒரு ஐபிஎல் அணி விலைக்கு வாங்க பேரம் பேசியுள்ளதாக கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பு பற்றிக் கொண்டுள்ளது.