செவ்வாய், 5 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: புதன், 6 டிசம்பர் 2023 (11:40 IST)

ஐபிஎல் மினி ஏலத்தை நடத்த உள்ள முதல் பெண்ணாக மல்லிகா சாகர்… பிசிசிஐ முடிவு!

உலகக் கோப்பை ஜுரம் சமீபத்தில் அடங்கிய நிலையில் இப்போதே அடுத்த ஆண்டு நடக்க உள்ள ஐபிஎல் சீசன் பற்றிய பேச்சுகள் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளன. அதற்குக் காரணம் இந்த மாதத்தில் நடக்க உள்ள ஐபிஎல் மினி ஏலம்தான். இந்த ஏலத்துக்கு 1,166 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். அதில் இந்திய வீரர்கள் 830 பேர்களும், 336 வெளிநாட்டு வீரர்களும் அடங்குவர்.

இந்த முறை வெளிநாட்டில் ஐபிஎல் மினி ஏலம் நடக்க உள்ள நிலையில் இந்த முறை ஏலதாரராக மல்லிகா ஷர்மா என்ற பெண் ஏலத்தை நடத்துவார் என சொல்லப்படுகிறது. இவர் ஏற்கனவே ப்ரோ கபடி லீக் ஆண்கள் மற்றும் பெண்கள் லீக்குக்கான ஏலத்தை நடத்தியுள்ளார்.

இதுவரை ஐபிஎல் ஏலத்தை சாரு சர்மா, ரிச்சர்ட் மெட்லி, ஹூஜ் எட்மாஸ் உள்ளிட்ட ஆண்கள்தான் நடத்தியுள்ளனர். முதல் முறையாக ஒரு பெண் ஐபிஎல் ஏலத்தை நடத்த உள்ளார் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.