புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Arun Prasath
Last Updated : வெள்ளி, 3 ஜனவரி 2020 (16:15 IST)

5 போட்டிகள், 4 சதங்கள் .. வெளுத்து கட்டிய மார்னஸ்

கடந்த 5 போட்டிகளில் 4 சதங்களை அடித்து கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மார்னஸ் லபூஷேன்

நியூஸிலாந்து-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3 ஆவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வரும் நிலையில் ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பேட்டிங்கில் இறங்கியது.

அந்த போட்டியில் களமிறங்கிய மார்னஸ் லபூஷேன், அசத்தலாக விளையாடி சதமடித்தார். இதற்கு முன் கடந்த 4 டெஸ்டுகளில் 3 சதங்கள் அடித்து விளாசிய மார்னஸ், இதன் மூலம் 5 டெஸ்டுகளில் 4 சதங்களை அடித்து சாதனை படைத்துள்ளார்.