வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 3 ஜனவரி 2020 (08:46 IST)

என் சாதனையை இவர்களால் முறியடிக்க முடியும்! – லாராவின் பட்டியல்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற சாதனையை படைத்துள்ள ப்ரையன் லாரா தன் சாதனையை யாரால் முறியடிக்கு முடியும் என கூறியுள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே ஒரே இன்னிங்ஸில் 400 ரன்கள் அடித்த சாதனையை படைத்தவர் வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் பேட்ஸ்மேன் ப்ரையன் லாரா. இத்தனை வருடங்களுக்கு பிறகும் அந்த சாதனையை யாராலும் முறியடிக்க இயலவில்லை.

சமீபத்தில் டேவிட் வார்னர் முச்சதம் அடித்தாலும் 335 ரன்கள் எடுத்திருந்தபோது டிம் பெய்ன் டிக்ளேர் செய்ததால் ஆட்டம் முடிந்தது. இந்நிலையில் தனது 400 ரன்கள் சாதனையை யாரெல்லாம் முறியடிக்க வாய்ப்பிருக்கிறது என்பது குறித்து ப்ரையல் லாரா கூறியுள்ளார்.

அதில் அவர் ”ஸ்டீவ் ஸ்மித் எனது சாதனையை முறியடிப்பது சற்றே சிரமமானது. ஆனால் டேவிட் வார்னர் போன்றவர்களால் கண்டிப்பாக முடியும். விராட் கோலி முதலாவதாக களம் இறங்கினால் எளிதில் என் சாதனையை முறியடித்து விடுவார். ரோகித் சர்மாவை பொறுத்த வரை அவருக்கு நாள் நல்லபடியாக இருந்தால் சாதனையை முறியடிப்பார்” என தெரிவித்துள்ளார்.