வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 3 ஜனவரி 2020 (11:10 IST)

அடேங்கப்பா.. நம்ம கோலியா இது! – கோலியின் 10 வருட புகைப்படம்!

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

2019ம் ஆண்டு முடிந்து 2020ம் ஆண்டு தொடங்கியிருக்கும் நிலையில் பலர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு எடுத்த போட்டோவுடன் தற்போதைய போட்டோவையும் இணைத்து Photo of the decade என்ற தலைப்பில் பகிர்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது ட்விட்டரில் 10 வருட முந்தைய புகைப்படத்தையும், தற்போதைய புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். பழைய புகைப்படத்தில் புமா நிறுவன செருப்புகளை கையில் வைத்தவாறு போஸ் கொடுக்கும் கோலி, தற்போதைய புகைப்படத்தில் புமா ஷூக்களை வைத்து கொண்டு போஸ் கொடுக்கிறார்.

விரட கோலிக்கு வயது தற்போது 31 ஆகிறது. 10 வருடங்களுக்கு முன்பு அவரது 21வது வயதில் அவர் எடுத்த போட்டோ தற்போது அவரது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.