வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 2 ஜனவரி 2020 (19:21 IST)

அனில் கும்ப்ளே இல்லாதபோது ஹர்பஜன் செய்த காரியம்! – மனம் திறந்த கங்குலி!

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் குறித்த சில சுவாரஸ்யமான சம்பவங்களை ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார் பிசிசிஐ தலைவர் கங்குலி.

2001ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் இந்தியா விளையாடி வந்தது. அப்போது இந்திய அணியின் கேப்டனாக சவுரவ் கங்குலி இருந்தார். 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட அந்த தொடரில் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் அனில் கும்ப்ளேவுக்கு காயம் பட்டதால் விளையாட முடியாமல் போனது. அவருக்கு பதிலாக களம் இறக்கப்பட்ட ஹர்பஜன் சிங் தனது அபார பந்துவீச்சாள சரசரவென விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

3 டெஸ்ட் ஆட்டங்களிலும் 32 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்கு வெற்றியை ஏற்படுத்தியதுடன் அந்த தொடரின் நாயகன் விருதையும் பெற்றார். அன்றைய அனுபவங்கள் குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த சவுரவ் கங்குலி “அப்போது ஹர்பஜன் இந்திய அணிக்கே புதிதானவர். அவரை கண்ட மாத்திரத்திலேயே அவரை பிடித்து போய்விட்டதாக பலர் கூறினார்கள். ஆனால் எனக்கு அவரை ஊடன் கார்டன் மைதானத்தில் 14 விக்கெட்டுகளை சரித்த போதே பிடித்து போய்விட்டது. அனில் கும்ப்ளே இல்லாத நிலையில் டெஸ்ட் தொடர்களில் பெரிதும் அனுபவம் இல்லாமலே அவர் விக்கெட்டுகளை சரித்தது என்னை திகைக்க செய்தது” என்று கூறியுள்ளார்.