செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 18 மே 2024 (07:28 IST)

கடைசி போட்டியில் ஆறுதல் வெற்றி பெற்ற லக்னோ.. போராடி தோற்ற மும்பை இந்தியன்ஸ்!

ஐபிஎல் தொடரின் 17 ஆவது சீசன் மார்ச் மாதம் தொடங்கி தற்போது இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. இன்னும் இரண்டு லீக் போட்டிகள் மட்டுமே மீதமுள்ளன.  வருகின்றன. இதுவரையிலான போட்டிகளின் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகள் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்றுள்ளன.

இந்நிலையில் ப்ளே ஆஃப் ரேஸில் இருந்து வெளியேறியுள்ள லக்னோ மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் இன்று ஆறுதல் வெற்றிக்காக விளையாடின. மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட் செய்த லக்னோ அணி 6 விக்கெட்களை இழந்து 214 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் அதிரடி பேட்ஸ்மேன் நிக்கோலஸ் பூரன் 29 பந்துகளில் 75 ரன்கள் சேர்த்து அதிரடியாக ஆடினார்.

இதையடுத்து பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 196 ரன்கள் மட்டும் சேர்த்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. மும்பை அணியில் ரோஹித் ஷர்மா 68 ரன்களும், நமன் திர் 62 ரன்களும் சேர்த்தனர். லக்னோ அணி இந்த போட்டியில் வெற்றி பெற்று 14 புள்ளிகள் பெற்றாலும், அவர்களின் நெட் ரன்ரேட் காரணமாக அவர்களால் ப்ளே ஆஃப் செல்ல முடியாத சூழல் இல்லை.