வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 1 மே 2023 (17:36 IST)

அய்யோ இவரா? திரும்பி வந்த கேதார் ஜாதவ்! – அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Kedhar Jadhav
இன்று நடைபெற உள்ள ஐபிஎல் லீக் போட்டியில் கேதர் ஜாதவ் ஆர்சிபி அணிக்காக களமிறங்குவதாக வெளியாகியுள்ள செய்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பரபரப்பாக நடந்து வரும் ஐபிஎல் 16வது சீசனில் இன்றைய லீக் போட்டியில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ அணி, டூ ப்ளெசிஸ் தலைமையிலான ஆர்சிபி அணியை எதிர்கொள்கிறது. முந்தைய லீக் மேட்ச்சில் இதே போல இரண்டு அணிகளும் சின்னசாமி ஸ்டேடியத்தில் மோதிக் கொண்டன. அந்த போட்டியில் ஹோம் க்ரவுண்ட் என்றும் பாராமல் ஆர்சிபியை வீழ்த்தி லக்னோ வெற்றி பெற்றது.

இன்று நடைபெற இருக்கும் போட்டியில் ஆர்சிபி அணி லக்னோவை அதன் ஹோம் க்ரவுண்டில் வீழ்த்தி பழி தீர்க்கும் என ஆர்சிபி ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் இன்றைய போட்டியில் ஆர்சிபி அணியின் ஆல் ரவுண்டரான டேவிட் வில்லிக்கு பதிலாக இந்திய கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ் விளையாட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

டேவிட் வில்லிக்கு பதிலாக கேதர் ஜாதவ் என்ற இந்த தகவல் ஆர்சிபி ரசிகர்களுக்கே கொஞ்சம் அதிர்ச்சியாகதான் உள்ளது. கடந்த சீசன்களில் சிஎஸ்கேவுக்காக விளையாடிய ஜாதவ் சுமாரான ஆட்டத்தையே அளித்தார். இதனால் பலரது கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளானார். தற்போது ஆர்சிபியில் இருந்தாலும் இப்போதுதான் ஆடும் 11 அணியில் ஜாதவ் இணைகிறார்.

இந்த ஐபிஎல் சீசன் பல அதிசயங்களை நடத்தி வருகிறது. ரஹானே, முரளி விஜய் போன்ற ஃபீல்ட் அவுட் ஆகிவிட்டதாக கருதிய வீரர்கள் இந்த சீசனில் பல ரன்களை அடித்து ஆட்டத்தையே புரட்டிப் போட்டு வருகிறார்கள். இன்றைய ஆட்டத்தில் கேதர் ஜாதவ் ஒரு பெரிய கம்பேக்கை காட்டுவாரா என்ற எதிர்பார்ப்பும், சொதப்பிவிடுவாரா என்ற அச்சமும் ரசிகர்களிடையே சூழ்ந்துள்ளது.

Edit by Prasanth.K