ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 1 மே 2023 (07:59 IST)

என்ன பேட்ஸ்மேன்களாக வந்துட்டே இருக்காங்க… சி எஸ் கே பற்றி புலம்பித் தள்ளிய அஸ்வின்!

ஐபிஎல் 16 ஆவது சீசன் இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த சீசன்ன் முதல் பாதி முடிந்து விறுவிறுப்பாக சென்றுவருகிறது. ப்ளே ஆஃப்க்கு செல்லும் அணிகள் இன்னும் உறுதியாகவில்லை.

இந்நிலையில் இந்த சீசனில் சி எஸ் கே அணியை இரண்டு போட்டிகளிலும் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி “யாரு சாமி இவனுங்க “ என ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

அந்த அணியின் நட்சத்திர பவுலர் ரவிச்சந்திரன் அஸ்வின் சி எஸ் கே பேட்டிங் லைன் அப் பற்றி பேசியுள்ளார். அதில் “சி எஸ் கே பேட்டிங் வேற லெவலில் உள்ளது.  விக்கெட் விழ விழ எண்ணெய் கிணற்றில் இருந்து எண்ணெய் வருவது போல மொயின் அலி, ராயுடு, ஜடேஜா என வந்துகொண்டே இருக்கிறார்கள். இவர்களுக்கு எல்லாம் அப்புறம் தோனி வேற ரெடியா இருக்காரு. விக்கெட்டே எடுக்கவேண்டாம், அவர் வந்தால் சிக்ஸர்களாக பறக்கும் என பார்ப்பவர்களுக்கு தோன்றும் போல” எனக் கூறியுள்ளார்.