வியாழன், 29 பிப்ரவரி 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth

நேற்றைய போட்டியில் இளம் வீரர் ஜெய்ஸ்வால் படைத்த மற்றொரு சாதனை!

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான நேற்றைய போட்டியில் ராயல்ஸ் வீரர் ஜெய்ஸ்வால் 62 பந்துகளில் 124 ரன்கள் சேர்த்து வான வேடிக்கைக் காட்டினார். இந்த இன்னிங்ஸில் அவர் 16 பவுண்டரிகளும் 8 சிக்ஸர்களும் விளாசினார்.

21 வயதாகும் ஜெய்ஸ்வால் இன்னும் இந்திய அணிக்காக அறிமுகம் ஆகவில்லை. இந்நிலையில்  இந்த இன்னிங்ஸ் மூலமாக தேசிய அணிக்காக அறிமுகமாகாமல் ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ஜெய்ஸ்வால் முதலிடத்துக்கு சென்றுள்ளார்.

இவருக்கு அடுத்த இடத்தில் பால் வால்தாட்டி, ஷான் மார்ஷ் மற்றும் மனிஷ் பாண்டே ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

 இந்த தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஜெய்ஸ்வால் விரைவில் இந்திய அணியில் அறிமுகமாவார் என எதிர்பார்க்கலாம்.