செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 29 நவம்பர் 2023 (19:09 IST)

விராட் கோலியின் சாதனையை சமன் செய்த கேன் வில்லியம்ஸ்

Kane Williamson
டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி 29 சதங்கள் அடித்துள்ள நிலையில், இவரது சாதனையை நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் சமன் செய்தார்.
 
விராட் கோலியின் சாதனையை சமன் செய்தார் நியூசிலாந்து கிரிக்கெட் அணியின்  கேப்டன் வில்லியம்சன்.
 
இந்திய கிரிக்கெட் வீரர் வீராட் கோலி சமீபத்தில் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 50 சதங்கள் அடித்து சச்சின் சாதனையை முறியடித்தார்.
 
இந்த நிலையில், டெஸ்ட் போட்டிகளில் அவர் 29 சதங்கள் அடித்துள்ள நிலையில், இவரது சாதனையை நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் சமன் செய்தார்.
 
மேலும், விராட் கோலியைவிட விரைவாக 29 டெஸ்ட் சதம் அடித்து அவரது சாதனையை வில்லியம்சன் முறியடித்துள்ளார்.
 
வங்கதேச அணிக்கு எதிரான முதல் ட டெஸ்ட் போட்டியில் வில்லியம்சன் சதம் அடித்து இந்த சாதனையை சமன் செய்துள்ளார்.
 
இந்தச் சதம் மூலம்  தொடர்ந்து 4 போட்டிகளில் சதம் அடித்த முதல் நியூசிலாந்து வீரர் என்ற சாதனை படைத்துள்ளார்.
 
அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.