செவ்வாய், 17 செப்டம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: வெள்ளி, 6 செப்டம்பர் 2024 (15:48 IST)

வெளிமாநிலங்களில் கோட் படத்துக்கு நெகட்டிவ் விமர்சனம்… காரணம் என்ன?

வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்த GOAT திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த படத்தில் விஜய்யோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். யுவன் இசையில் சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவில் படம் மிகப்பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸ் ஆனது.

நேற்று முதல் காட்சி ரிலீஸ் ஆனதில் இருந்து படம் கலவையான விமர்சனங்களதான் பெற்று வருகிறது. ஆனால் தென்னிந்திய மாநிலங்களில் நேற்று படம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியது. இந்த படத்தில் பல சர்ப்ரைஸ் தருணங்கள் அமைந்துள்ளன. தமிழ்நாட்டில் இந்த படத்துக்கு மிகப்பெரிய வரவேற்புக் கிடைத்திருக்கும் நிலையில் கேரளா, ஆந்திரா மற்றும் இந்தி பேசும் மாநிலங்களில் நெகட்டிவ் விமர்சனங்கள் வரத் தொடங்கியுள்ளன.

இதற்கு முக்கியக் காரணம் படத்தில் அந்த மொழி ரசிகர்களுக்கு தெரிந்த பிரபல நடிகர்கள் இல்லாததுதான் என சொல்லப்படுகிறது. மேலும் வெங்கட்பிரபு கொடுத்துள்ள சர்ப்ரைஸ்களான விஜயகாந்த், சிவகார்த்திகேயன் ஆகியோரின் கேமியோ தமிழ் ரசிகர்களை தவிர மற்ற மொழி ரசிகர்களுக்கு ரசிக்கும் அம்சமாக இல்லை என்பதுதான் காரணம் என்று சொல்லப்படுகிறது.