1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 22 நவம்பர் 2023 (07:35 IST)

என் முன் இரண்டு வாய்ப்புகள் இருந்தன… முகமது ஷமி பகிர்ந்த எமோஷனல் ஸ்டோரி!

நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் 7 போட்டிகளில் மட்டுமே விளையாடி 24 விக்கெட்களை வீழ்த்தினார் முகமது ஷமி. 2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் 15விக்கெட்களையும், 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் 16 விக்கெட்களையும் வீழ்த்தினார். இதன் மூலம் உலகக் கோப்பை தொடர்களில் அவர் மொத்தமாக 55 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் 2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் காயத்தோடு விளையாடியது குறித்து பேசியுள்ளார். அதில் “அப்போது எனக்கு கால் முட்டியில் வீக்கம் இருந்தது. எனக்கு இரண்டு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன. உடனே அறுவை சிகிச்சை செய்துகொள்வது அல்லது உலகக் கோப்பையை காயத்தோடு விளையாடுவது.

நான் இரண்டாவது வாய்ப்பை தேர்ந்தெடுத்தேன். ஒவ்வொரு போட்டி முடிந்த பின்னரும் மருத்துவமனைக்கு சென்று காயத்தில் ஊசி போட்டுக் கொள்வேன். நாட்டுக்காக விளையாடும் போது உங்களுக்கு வலி தெரியாது.” என தெரிவித்துள்ளார். அந்த உலகக் கோப்பை தொடர் முடிந்தவுடன் காயம் மற்றும் குடும்ப பிரச்சனைகள் காரணமாக ஷமி ஒன்றரை ஆண்டுகள் சர்வதேசக் கிரிக்கெட் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.