வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: வெள்ளி, 6 செப்டம்பர் 2024 (15:42 IST)

சர்வதேசக் கிரிக்கெட்டில் அறிமுகம்… 20 ஆண்டுகளை நிறைவு செய்த தினேஷ் கார்த்திக்!

நடந்து முடிந்த ஐபிஎல் தொடருக்குப் பிறகு ஆர் சி பி அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். ரசிகர்களின் கரகோஷங்களுக்கு மத்தியில் அவர் விடைபெற்று வெளியேறினார். அவரை சக வீரர்கள் கட்டியணைத்து பிரியாவிடை கொடுத்து அனுப்பினர்.

இதையடுத்து அவர் வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார். மேலும் வெளிநாட்டு டி 20 லீக் தொடர்களிலும் விளையாட ஆர்வம் காட்டுகிறார். இந்நிலையில் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆகி 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் நெகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளார்.

அதில் இங்கிலாந்து அணிக்கு எதிராக தான் அறிமுகமான போட்டியில் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். நம்பிக்கைக்குரிய இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக அவர் அந்நேரத்தில் அறியப்பட்டார். ஆனால் அதே அண்டின் இறுதியில் தோனி அறிமுகமாகி அடுத்த 15 ஆண்டுகளுக்கு இந்திய அணியின் நிரந்தர விக்கெட் கீப்பர் இடத்தைப் பிடித்தார்.