வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 28 நவம்பர் 2023 (20:35 IST)

டி-20 உலகக் கோப்பை தொடரில் தகுதி பெற்ற புதிய அணி!

cricket
டி-20  உலகக் கோப்பை தொடரில் விளையாட நமீபியா அணி தகுதி பெற்றுள்ளது.
 
மேற்கிந்திய தீவுகள், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்கதேசம்,  அயர்லாந்து, ஸ்காட்லாந்து,  பப்புவா  நியூ கினியா, கனடா, நேபாளம், ஓமன், நமீபியா என 19 நாடுகள் இதுவரை டி20  உலகக் கோப்பை தொடரில் விளையாட தகுதி பெற்றுள்ளன.
 
மீதமுள்ள 1 இடத்திற்கு  உகாண்டா, ஜிம்பாவே, கென்யா ஆகிய அணிகள் போட்டியிடவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

மேலும், டி-20  உலகக் கோப்பை தொடரில் விளையாட நமீபியா அணி தகுதி பெற்றுள்ளதால் அந்த நாட்டு கிரிக்கெட் ரசிகர்களும், மக்களும் பெரிதும் மகிழ்ச்சியடைந்து, அந்த நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.