தொடர்புடைய செய்திகள்
- பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்.! உயரம் தாண்டுதலில் அசத்திய பிரவீன் குமார்.!
- சர்வதேசக் கிரிக்கெட்டில் அறிமுகம்… 20 ஆண்டுகளை நிறைவு செய்த தினேஷ் கார்த்திக்!
- கம்பீருக்கும் டிராவிட்டுக்கும் என்ன வித்தியாசம்… ரிஷப் பண்ட் பகிர்ந்த தகவல்!
- ராகுல் டிராவிட் வரவால் அணி மாறுகிறாரா குமார் சங்ககரா..!
- வருமான வரியில் கோலியை முந்தினாரா விஜய்?
மீண்டும் ஒரு சவாலை எதிர்நோக்குகிறேன்… புதிய பொறுப்பு குறித்து ராகுல் டிராவிட் பதில்!
இந்திய அணிக்காக 15 ஆண்டுகளுக்கும் மேல் விளையாடிய ராகுல் டிராவிட் எந்தவொரு கோப்பையையும் வெல்லாமல் ஓய்வு பெற்றார். ஆனாலும் தொடர்ந்து இந்திய அணிக்காக தன்னுடைய பங்களிப்பை அவர் கொடுத்துக் கொண்டுதானிருந்தார். இந்திய 19 வயதுக்குட்பட்டோருக்கான அணிக்கு பயிற்சியாளராக இருந்து அந்த அணியைக் கோப்பை வெல்லவைத்தார்.
அதன் பிறகு இந்திய அணிக்குப் பயிற்சியாளராக பொறுப்பேற்ற அவர் டி 20 உலகக் கோப்பையை வெல்லவைத்தார். அந்த வெற்றியோடு அவர் இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகினார். இதையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே பயிற்சியாளராக இருந்த சங்ககரா அந்த அணியின் இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றுக்கொண்ட ராகுல் டிராவிட் அது குறித்து பேசும்போது “டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பயிற்சியாளராகப் பொறுப்பேற்றது புதிய சவாலாக இருக்கும் என நினைக்கிறேன். அதற்கு சரியான இடம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிதான்” எனக் கூறியுள்ளார்.