வியாழன், 3 அக்டோபர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 6 ஆகஸ்ட் 2024 (14:14 IST)

கம்பீர் நீண்ட நாட்களுக்கு பயிற்சியாளராக தாக்குப் பிடிக்கமாட்டார்… முன்னாள் வீரர் சொல்லும் காரணம்!

IPL டி 20  கோப்பையை வென்ற மகிழ்ச்சியோடு கொல்கத்தா அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டார் கவுதம் கம்பீர்.  இதையடுத்து இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்பேற்றுக்கொண்டார்.

இலங்கைக்கு எதிரான தொடரில் இருந்து கம்பீர் பயிற்சியாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். டி 20 தொடர் வெற்றிகரமாக முடிந்த நிலையில் தற்போது ஒருநாள் தொடர் நடந்து வருகிறது. இந்திய அணி முதல் போட்டியில் டிராவும், இரண்டாவது போட்டியில் தோல்வியும் அடைந்து பின்னடைவை சந்தித்துள்ளது. இந்த தோல்விக்கு கம்பீர் செய்யும் சில சோதனை முயற்சிகள்தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் கம்பீர் பற்றி பேசியுள்ள 2007 ஆம் ஆண்டு டி 20 உலகக் கோப்பையில் விளையாடிய ஜோஹிந்தர் ஷர்மா “கம்பீர் நீண்ட ஆண்டுகளுக்கு பயிற்சியாளராக நீடிக்க மாட்டார் என நினைக்கிறேன். ஏனென்றால் அவரிடம் எல்லாவற்றையும் பற்றியும் ஒரு தீர்க்கமான முடிவு இருக்கும். அதை வீரர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என சொல்ல முடியாது. நான் கண்டிப்பாக கோலி பற்றி சொல்லவில்லை. நிறைய முறை கம்பீரின் முடிவுகள் மற்ற வீரர்களுக்கு பிடிக்காதவையாக இருந்துள்ளன.” எனக் கூறியுள்ளார்.