1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Nehra talked about gambhir mistake in srilanka series

கம்பீர் செய்த தவறு இதுதான்… ஆஷிஷ் நெஹ்ரா சொன்ன காரணம்!

கம்பீர்
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நேற்று நடந்த இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி இடம் இந்தியா அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. 240 என்ற மிக எளிய இலக்கைத் துரத்திய இந்திய அணிக்கு நல்ல தொடக்கத்தை ரோஹித் ஷர்மா அமைத்துக் கொடுத்தும் அதன் பின்னர் வந்த பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் இந்திய அணி 208 ரன்கள் மட்டுமே சேர்த்து 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்நிலையில் இந்த தொடரில் இலங்கை அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் இந்த தொடரை இந்திய அணி சமன்செய்யதான் முடியும் அல்லது தொடரை இழக்கக் கூடும். தற்போதைய சூழ்நிலையில் பலவீனமான இலங்கை அணியிடம் வலுவான இந்திய அணி ஒருநாள் தொடரை இழந்தால் அது ரசிகர்களிடையே அதிருப்தியைதான் ஏற்படுத்தும்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆஷிஷ் நெஹ்ரா கம்பீர் செய்த தவறு குறித்து பேசும்போது “இந்த தொடரில் கம்பீர் ரோஹித் மற்றும் கோலி ஆகியோருக்கு ஓய்வு அளித்திருக்கலாம். அவர்கள் இந்தியாவில் நடக்கும் தொடரில் கம்பேக் கொடுத்திருக்கலாம். அவர்கள் பற்றி புரிந்துகொள்ள கம்பீர் ஒன்றும் வெளிநாட்டு பயிற்சியாளர் இல்லை. அவர்களோடு இணைந்து கம்பீர் விளையாடியுள்ளார். இந்த தொடரில் அவர் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்திருக்கலாம்” எனக் கூறியுள்ளார்.
 
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
கம்பீர் நீண்ட நாட்களுக்கு பயிற்சியாளராக தாக்குப் பிடிக்கமாட்டார்… முன்னாள் வீரர் சொல்லும் காரணம்!