செவ்வாய், 1 அக்டோபர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 6 ஆகஸ்ட் 2024 (14:40 IST)

18 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கைக்கு எதிராக மோசமான சாதனையைப் படைக்கப் போகும் இந்தியா!

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நேற்று நடந்த இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி இடம் இந்தியா அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. 240 என்ற மிக எளிய இலக்கைத் துரத்திய இந்திய அணிக்கு நல்ல தொடக்கத்தை ரோஹித் ஷர்மா அமைத்துக் கொடுத்தும் அதன் பின்னர் வந்த பேட்ஸ்மேன்கள் சொத்ப்பியதால் இந்திய அணி 208 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

ஏற்கனவே முதல் போட்டி டிரா ஆன நிலையில் இப்போது 1-0 என்ற கணக்கில் இலங்கை அணி முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் 16 ஆண்டுகள் கழித்து இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை வெல்ல முடியாத சூழலுக்கு ஆளாகியுள்ளது இந்திய அணி. கடைசி போட்டியில் வென்றால் கூட  இந்திய அணி தொடரை சமன் செய்யதான் முடியும்.

ஒருவேளை அந்த போட்டியை இந்தியா தோற்றால் 27 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை அணியிடம் ஒருநாள் தொடரை தோற்ற மோசமான சாதனையைப் படைக்கும். கடைசியாக 1997 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி இழந்தது குறிப்பிடத்தக்கது.