கம்பீர் இடத்தில் டிராவிட் இல்லை… ஆலோசகர் பொறுப்புக்கு வெளிநாட்டு வீரரை தேர்வு செய்த KKR?
ராகுல் டிராவிட் பயிற்சியாளராக தன்னுடைய கடைசி தொடரில் விளையாடி உலகக் கோப்பையோடு வெளியேறியுள்ளார். 2007 ஆம் ஆண்டு ஐம்பது ஓவர் உலகக் கோப்பை தொடரை மிக மோசமாக இந்திய அணி விளையாடி லீக் சுற்றோடு வெளியேறியது. அப்போது இந்திய அணிக்குக் கேப்டனாக இருந்தது டிராவிட்தான். கேப்டனாக படுதோல்வி அடைந்த வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் பயிற்சியாளராக கோப்பையை வென்று விடைபெற்றுள்ளார்.
இந்நிலையில் அவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக நியமிக்க, அந்த அணி நிர்வாகம் முயற்சிகள் மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகின. முன்னதாக கொல்கத்தா அணியின் ஆலோசகராக இருந்த கம்பீர் இந்திய அணிக்குப் பயிற்சியாளர் ஆகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இப்போது கே கே ஆர் அணி தங்கள் ஆலோசகராக தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் ஜாக் காலிஸை நியமிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. காலிஸ் சில ஆண்டுகள் கொல்கத்தா அணிக்காக ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.