திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 13 ஜூலை 2024 (07:26 IST)

வெற்றியோடு விடைபெற்றார் ஆண்டர்சன்… ரசிகர்கள் வாழ்த்து மழை!

2003 ஆம் ஆண்டு தன்னுடைய டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கிய ஆண்டர்சன் தற்போது 187 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். அவர் விரைவில் சச்சின் டெண்டுல்கரின் அதிகபட்ச டெஸ்ட் போட்டி சாதனையை 200 டெஸ்ட் போட்டி என்ற சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த மே மாதம் அவர் தன்னுடைய ஓய்வு முடிவை வெளியிட்டார்.

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக தற்போது நடந்து வரும் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் கடைசியாக இங்கிலாந்து அணிக்காக விளையாடுகிறார் ஆண்டர்சன். இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் அவர் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். அதையடுத்து இரண்டாம் இன்னிங்ஸில் மூன்று விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். இதனால் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.

இதன் மூலம் தனது இறுதி டெஸ்ட் போட்டியில் வெற்றியோடு விடைபெற்றார், ஆண்டர்சன். அவருக்கு சச்சின் உள்ளிட்ட முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் வாழ்த்துகளையும் அவர் உருவாக்கிய நினைவுகளுக்காக நன்றியையும் பகிர்ந்துள்ளனர்.