1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Hardhik pandya should play test matches sunil gavaskar

ஹர்திக் பாண்ட்யாவை அதை செய்ய கட்டாயப்படுத்த வேண்டும்- சுனில் கவாஸ்கர் கருத்து!

ஐசிசி
நடந்து முடிந்த டி 20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடி இரண்டாவது முறையாகக் கோப்பையை வென்றது. இந்த தொடரை இந்திய அணி வெல்வதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்றாக ஹர்திக் பாண்ட்யாவின் ஆல்ரவுண்ட் ஆட்டத்திறன் அமைந்தது.

இந்த தொடருக்கு முன்பாக ஐபிஎல் தொடரில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார் ஹர்திக் பாண்ட்யா. மேலும் ரோஹித் ஷர்மாவை நீக்கிவிட்டு அவரை மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஆக்கியதும் ரசிகர்களுக்கு அவர் மேல் கோபம் வர காரணமாக அமைந்தது. ஆனால் உலகக் கோப்பையில் அவர் சிறப்பாக விளையாடியதன் மூலம் தன்னை வெறுத்தவர்களை கூட நேசிக்க வைத்துவிட்டார்.

இதையடுத்து அவர் இந்திய டி 20 அணிக்குக் கேப்டனாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பாண்ட்யா பற்றி பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் “ஹர்திக் பாண்ட்யா டெஸ்ட் போட்டிகளில் விளையாடினால் சிறப்பாக இருக்கும். அப்படி செய்தால் இந்திய அணி வெல்ல முடியாததாக இருக்கும். அவரை டெஸ்ட் போட்டிகளில் விளையாட சொல்லி அணி நிர்வாகம் பேசவேண்டும்” எனக் கூறியுள்ளார்.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
எதிரணி வீரர்களோடு சண்டை போட்டிருக்கிறேன்… அதெல்லாம் ஏன் –வீரர்களுக்கு கம்பீர் அறிவுரை!