1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. James Anderson talked about his IPL entry

என்னால் கிரிக்கெட் விளையாட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.. ஐபிஎல் எண்ட்ரி குறித்து ஆண்டர்சன் பதில்!

ஜேம்ஸ் ஆண்டர்சன்
2003 ஆம் ஆண்டு தன்னுடைய சர்வதேசக் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கிய ஆண்டர்சன் 187 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி சச்சினுக்கு அடுத்தபடியாக அதிக போட்டிகள் விளையாடிய வீரர் என்ற சாதனையைப் படைத்தார். சச்சின் டெண்டுல்கரின் அதிகபட்ச டெஸ்ட் போட்டி சாதனையை 200 டெஸ்ட் போட்டி என்ற சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த மே மாதம் அவர் தன்னுடைய ஓய்வு முடிவை வெளியிட்டார்.

இந்நிலையில் தன்னுடைய 42 ஆவது வயதில் அவர் ஐபிஎல் போட்டிகளில் விளையாட விரும்புகிறார். டிசம்பர் மாதம் நடக்கவுள்ள ஐபிஎல் மெகா ஏலத்தில் கலந்துகொள்ள ஆண்டர்சன் தன்னுடைய பெயரைப் பதிவு செய்து கொண்டுள்ளார். அவரின் அடிப்படை விலை 1.25 கோடி ரூபாயாகும். அவரை ஏலத்தில் எடுக்க அணிகள் ஆர்வம் காட்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

இதுபற்றி பேசியுள்ள அவர் “என்னால் இன்னும் சில ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. நான் இன்னும் உடல் தகுதியுடன்தான் இருக்கிறேன். என்னை  இதுவரை எந்த அணியும் தொடர்பு கொண்டு பேசவில்லை. நம்பிக்கையுடன் ஏலத்திற்குக் காத்திருக்கிறேன்” எனப் பேசியுள்ளார்.
About Writer
vinoth