தொடர்புடைய செய்திகள்
- விபத்துக்குப் பிறகு ரிஷப் பண்ட்டின் மனநிலை மாறியுள்ளது… ஷிகார் தவான் பாராட்டு!
- நான்கு சீனியர்களில் இரண்டு பேருக்குக் குறி… பார்டர் கவாஸ்கர் தொடர்தான் கடைசியா?
- இந்திய அணியில் கம்பீரின் அதிகாரத்தைக் குறைக்க முடிவு?
- WTC இறுதிப் போட்டிக்கு செல்ல இந்தியாவிற்கு வாய்ப்புள்ளதா? என்ன செய்ய வேண்டும்?
- இந்திய அணிக்கு எளிய இலக்கு… மூன்றாவது டெஸ்ட்டில் ஆறுதல் வெற்றி பெறுமா?
கம்பீருக்கு தயாராகிக் கொண்டிருக்கும் ஆப்பு… பார்டர் கவாஸ்கர் தொடர்தான் கடைசி வாய்ப்பு – பிசிசிஐ ஆலோசனை!
இந்தியா - நியூசிலாந்து இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடந்த நிலையில் மூன்று போட்டிகளையும் வென்ற நியுசிலாந்து அணி முதல் முறையாக இந்திய அணியை வொயிட்வாஷ் செய்துள்ளது. இதன் மூலம் கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ள தொடங்கியுள்ளது இந்திய அணி.
இதில் அதிகமாக விமர்சனங்களை எதிர்கொள்வது புதிய பயிற்சியாளர் கம்பீர்தான். கம்பீர் இந்திய அணிக்கு பொறுப்பேற்றதில் இருந்து இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை 0-2 என்ற கணக்கிலும், தற்போது நியுசிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை 0-3 என்ற கணக்கிலும் தோற்று சொதப்பியுள்ளது.
அவர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட போது இந்திய அணிக்கு புதிய மீட்பராக இருப்பார் என்ற பிம்பம் உருவாக்கப்பட்டது. ஆனால் அடுத்தடுத்த தோல்விகள் அதை உடைத்துள்ளன. மேலும் இப்போது கம்பீரின் அதிகாரத்தைக் குறைக்கவும் பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பார்டர் கவாஸ்கர் தொடரை இந்திய அணி வெல்லாத பட்சத்தில் இந்திய அணிக்கு லிமிடெட் ஓவர் கிரிக்கெட்டுக்கு ஒரு பயிற்சியாளர் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஒரு பயிற்சியாளர் என இரண்டு பேரை நியமிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.