1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 9 அக்டோபர் 2024 (09:46 IST)

மகளிர் உலகக் கோப்பையில் இன்றிரவு இலங்கையை எதிர்கொள்ளும் இந்திய அணி!

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் அக்டோபர் 3-ந்தேதி தொடங்கியது. இந்த தொடரில் கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.19.60 கோடியும், ரன்னர் அப் அணிக்கு ரூ.9.80 கோடியும், அரையிறுதிக்கு தகுதி பெரும் அணிக்கு ரூ.5.65 கோடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது போட்டிகள் நடந்து வரும் நிலையில் இன்றிரவு நடக்கவுள்ள போட்டியில் இந்திய அணி, இலங்கை அணியை எதிர்கொள்ள உள்ளது. இந்திய அணி இதுவரை விளையாடியுள்ள இரண்டு போட்டிகளில் ஒன்றில் வெற்றியும் ஒன்றில் தோல்வியும் அடைந்து ஏ பிரிவில் நான்காவது இடத்தில் உள்ளார். அதனால் இன்றைய போட்டி இந்திய அணிக்கு முக்கியமான போட்டியாகக் கருதப்படுகிறது.

க்ரூப் ஏ பிரிவில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் முதல் இரண்டு இடத்திலும் உள்ளன. பி பிரிவில் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகள் முதலிரண்டு இடங்களில் உள்ளன.