1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Three state election date today announcement?

மகாராஷ்டிரா உள்பட 3 மாநில சட்டப்பேரவை தேர்தல் அட்டவணை: தேர்தல் ஆணையம் இன்று வெளியீடு

Election
ஹரியானா, ஜார்கண்ட் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு இன்று தேர்தல் ஆணையத்தால் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளன.

மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களின் சட்டப்பேரவை பதவிக்காலம் நவம்பர் 3 மற்றும் நவம்பர் 26ம் தேதியில் முடிவடைகிறது. அதேபோல் ஜார்கண்ட் சட்டப்பேரவை பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முடிவடைகிறது.

இதனை அடுத்து இந்த மூன்று மாநிலங்களிலும் சட்டப்பேரவை தேர்தலை நடத்துவது குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கடந்த சில நாட்களாக ஆலோசித்து வந்த நிலையில் இன்று மதியம் 3 மணிக்கு தேர்தல் ஆணையம் மூன்று மாநில தேர்தல் தேதியை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே போல்  ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களிலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களில் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கெடு விதித்துள்ளதை அடுத்து இந்த இரண்டு யூனியன் பிரதேசங்களுக்கும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

மூன்று மாநில சட்டப்பேரவை தேர்தல் மற்றும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்ற செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva
 
அடுத்த கட்டுரையில்
தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. சென்னையில் இன்றைய நிலவரம்..!