வார்ம் அப் மேட்ச்சில் பங்களாதேஷை பந்தாடிய இந்தியா! – 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!
உலக கோப்பை டி20 பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி வங்கதேசத்தை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
ஐசிசி உலக கோப்பை போட்டிகள் இன்று முதல் தொடங்கி நடைபெற உள்ளது. இந்நிலையில் முன்னதாக சில அணிகள் இடையே பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்றது. நேற்று இந்தியா – வங்கதேச அணிகள் இடையே பயிற்சி ஆட்டம் நடைபெற்றது.
அதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்களை இந்தியா எடுத்திருந்தது. அதிகபட்சமாக ரோஹித் சர்மா 23 ரன்கள், ரிஷப் பண்ட் 53 ரன்கள், ஹர்திக் பாண்ட்யா 40 ரன்கள், சூர்யகுமார் 31 ரன்கள் அடித்தனர். சஞ்சு சாம்சன் 1 ரன்னில் அவுட் ஆனார்.
தொடர்ந்து களமிறங்கிய வங்கதேச அணியை இந்தியா பந்துவீச்சில் அதிரடி காட்டி வீழ்த்தியது. அதிகபட்சமாக முஹமதுல்லா மட்டும் 40 ரன்கள் அடித்தார். பலரும் ஒற்றை இலக்கத்திலும், டக் அவுட்டும் ஆனார்கள். இதனால் 20 ஓவர்கள் முடிவில் வங்கதேசம் 9 விக்கெட்டுகளை இழந்து 122 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது
இந்திய பந்துவீச்சாளரான அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும், ஷிவம் துபே 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இன்று முதல் ஐசிசி உலக கோப்பை போட்டிகள் தொடங்கும் நிலையில் தற்போது அமெரிக்கா – கனடா இடையே போட்டிகள் நடைபெற்று வருகிறது.
Edit by Prasanth.K