செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 17 அக்டோபர் 2023 (08:05 IST)

மிக்கி ஆர்தரின் விமர்சனத்துக்கு ஐசிசி அளித்த பதில்!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய  உலகக் கோப்பை தொடர் லீக் போட்டி அகமதாபாத்தில்  உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் அக்டோபர் 14 ஆம் தேதி நடந்தது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்த போட்டி முடிந்த பின்னர், இன்றைய போட்டி பற்றி பாகிஸ்தான் அணியின் இயக்குனர் மிக்கி ஆர்தர் “இது ஐசிசி நடத்திய போட்டிபோல் இல்லை. பிசிசிஐ நடத்திய போட்டிபோல் இருந்தது.  மைதானத்தில் பாகிஸ்தானுகு ஆதரவான எந்த கோஷமும் அடிக்கடி வரவில்லை. நான் இதை காரணமாக கூறவில்லை” என்று கூறியுள்ளார்.

இதுபற்றி இப்போது ஐசிசி தலைவர் கிரேக் பார்க்லே விளக்கம் அளித்துள்ளார். அதில் “நாங்கள் நடத்தும் எல்லா நிகழ்வுக்கும் பல தரப்பில் இருந்து விமர்சனம் வரும். தற்போது உலகக் கோப்பை தொடர் தொடக்க நிலையில் மட்டுமே உள்ளது.  என்னென்ன மாற்றம் செய்யலாம், எதனை மேம்படுத்தலாம் என்பதை மதிப்பாய்வு செய்வோம். முடியும் போது இது ஒரு சிறப்பான உலகக் கோப்பை தொடராக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.