திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 2 ஜூன் 2023 (09:46 IST)

பாகிஸ்தானை வீழ்த்தி ஆசியக் கோப்பையை கைப்பற்றிய இந்தியா!

Asiacup Hockey
ஓமனில் நடந்த ஆசியக்கோப்பை ஹாக்கி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியுள்ளது இந்திய அணி.



ஓமன் நாட்டின் சலாலா நகரில் 10வது ஜூனியர் ஆசியக்கோப்பை ஹாக்கி போட்டிகள் பரபரப்பாக நடந்து வந்தன. நேற்று நடந்த இதன் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் – இந்திய அணிகள் மோதிக் கொண்டன.

பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் கடைசி கட்டத்தில் பாகிஸ்தானுக்கு சில பெனால்டி கார்னர் வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் அதை இந்திய அணி சிறப்பாக முறியடித்தது. இதனால் போட்டி முடிவில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 4வது முறையாக ஆசியக்கோப்பை சாம்பியன்ஷிப் கோப்பையை இந்திய அணி வென்றுள்ளது.

இதற்கு முன்னர் 2004, 2008 மற்றும் 2015 ஆகிய ஆண்டுகளில் இந்திய ஹாக்கி அணி ஆசியக்கோப்பையை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Edit by Prasanth.K