கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா உறுதி! இங்கிலாந்து – தென் ஆப்பிரிக்கா போட்டி ரத்து!
தென் ஆப்பிரிக்கா - இங்கிலாந்து இடையேயான ஒருநாள் போட்டிகள் இன்று தொடங்க இருந்த நிலையில் கொரோனாவால் கைவிடப்பட்டது.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் உள்ள நிலையிலும், பல நாடுகளில் கிரிக்கெட் தொடர் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. எனினும் வீரர்களுக்கு பாதுகாப்பு சோதனைகள் உள்ளிட்டவையும் அடிக்கடி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இங்கிலாந்து – தென் ஆப்பிரிக்கா இடையேயான மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்க இருந்தது. போட்டிகள் தொடங்கும் முன்பாக விளையாட்டு வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் இருவருக்கு கொரோனா அறிகுறிகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஒருநாள் தொடர் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டதுடன் சம்பந்தப்பட்ட வீரர்களுடன் தொடர்பில் இருந்த சக வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.