ரஞ்சி கோப்பை: 2 இன்னிங்ஸிலும் ஷிவம் துபே டக் .. அரைசதம், சதமடித்து அசத்திய ஷர்துல் தாக்கூர்..!
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில், மும்பை மற்றும் ஜம்மு காஷ்மீர் அணிகள் மோதின.
இந்த போட்டியில் மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 120 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ரோகித் ஷர்மா வெறும் 3 ரன்கள் மட்டுமே எடுத்தார். மற்றொரு நட்சத்திர ஆட்டக்காரர் ஷிவம் துபே டக் அவுட் ஆனார்.
ஆனால், அதே நேரத்தில், ஷர்துல் தாக்கூர் இந்த போட்டியில் அரை சதம் அடித்து அசத்தினார். இதனைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீர் 206 ரன்கள் எடுத்த நிலையில், மும்பை தற்போது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
முதல் இன்னிங்ஸில் ஏமாற்றிய ரோகித் சர்மா, இரண்டாவது இன்னிங்ஸில் 28 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதேபோல், முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆன ஷிவம் துபே இரண்டாவது இன்னிங்ஸில் டக் அவுட் ஆனார்.
ஆனால், அதே நேரத்தில், முதல் இன்னிங்ஸில் அரைசதம் அடித்த ஷர்துல் தாக்கூர், இரண்டாவது இன்னிங்சில் சதம் அடித்து அசத்தியுள்ளார்.
இந்த நிலையில், மும்பை அணி தற்போது 183 ரன்கள் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva