1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 4 டிசம்பர் 2020 (16:56 IST)

ஒரே ஒரு வீரருக்கு கொரோனா: போட்டியை ரத்து செய்வதாக ஐசிசி அறிவிப்பு!

இங்கிலாந்து மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் போட்டிகள் தொடர் சமீபத்தில் நடந்தது என்பதும் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் மூன்றிலுமே இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கேப்டன்டவுன் நகரில் நடைபெற திட்டமிடப்பட்டு இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயாராக இருந்த நிலையில் திடீரென தென் ஆப்பிரிக்க வீரர் ஒருவருக்கு ஒரு பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டது 
 
இதனை அடுத்து இந்த போட்டியை ரத்து செய்வதாக ஐசிசி அறிவித்துள்ளது. இங்கிலாந்து மற்றும் ஒருநாள் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஒரே ஒரு வீரருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டதால் ரத்து செய்யப்பட்டதால் இரு நாட்டு அணிகள் இரு நாட்டு ரசிகர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர் 
 
இதனை அடுத்து  இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்காவுக்கு 2வது முதல் ஒரு நாள் போட்டி டிசம்பர் 6ஆம் தேதி நடைபெறும்