வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 6 டிசம்பர் 2020 (15:30 IST)

195 ரன்களை இலக்காக நிர்ணயித்த ஆஸ்திரேலியா! – வெல்லுமா இந்தியா?

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 195 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான சுற்று பயண ஆட்டம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. முன்னதாக நடந்த ஒருநாள் போட்டிகளில் இந்தியாவை 1-2 என்ற வீதத்தில் ஆஸ்திரேலியா வென்றது. இந்நிலையில் அடுத்ததாக தொடங்கிய 3 ஆட்டங்கள் கொண்ட டி20 போட்டியின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவை இந்தியா வென்றுள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் இரண்டாவது டி20 போட்டியில் முதலாவதாக பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 194 ரன்களை ஸ்கோர் செய்துள்ளது. மேத்யூ ஒரு அரை சதம் வீழ்த்திய நிலையில், ஸ்டீவ் ஸ்மித் 48 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இந்த போட்டியிலும் தமிழக வீரர் நடராஜன் நான்கு ஓவர்களில் 20 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். இந்நிலையில் 195 என்ற இலக்கை எட்ட வேண்டிய கட்டாயத்தில் இந்தியா களம் இறங்க உள்ளது.