1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 24 ஜனவரி 2025 (08:07 IST)

22 வயது ஷமியைப் பார்க்க இன்னும் கொஞ்ச நாள் காத்திருங்கள்… அர்ஷ்தீப் சிங் கொடுத்த அப்டேட்!

2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து முழங்கால் காயத்தினால் அவதிப்பட்ட ஷமிக்கு லண்டனில் ஜனவரி மாதம் ஊசி மூலமாக சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் அவரது காயத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் இல்லை என்பதால் அவருக்கு கனுக்காலில் அறுவை சிகிச்சை லண்டனில் நடந்தது.

அதன் பின்னர் பல மாதங்கள் பெங்களூருவில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடெமியில் பயிற்சியை மேற்கொண்டு குணமானார். இதையடுத்து ரஞ்சிக் கோப்பை தொடரில் பெங்கால் அணிக்காக விளையாடிய அவர் மத்திய பிரதேச அணிக்கு எதிராக 7 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். ஆனாலும் அவருக்கு காலில் வீக்கம் இருந்ததால் அவர் பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரில் விளையாடவில்லை. இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான டி 20 தொடரில் அவர் இடம்பெற்றார். ஆனால் முதல் போட்டியில் அவர் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் ஷமி பற்றி பேசியுள்ள இளம் வீரர் அர்ஷ்தீப் சிங் “ஷமியிடம் இருந்து பந்து வெளிவரும் விதம் மீண்டும் 22 வயது ஷமி அண்ணனைப் பார்ப்பது போல உள்ளது. இன்னும் சில நாட்கள் காத்திருந்தால் நீங்களும் அதைப் பார்க்கலாம். அதை நீங்கள் மிகவும் ரசிப்பீர்கள்” எனக் கூறியுள்ளார்.