விசா பெறுவதில் சிக்கல்… விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட இங்கிலாந்து வீரர்!
இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு இரு அணிகளும் தயாராகி வருகின்றன. நாளை குஜராத்தின் ராஜ்கோட்டில் இந்த டெஸ்ட் போட்டி நடக்க உள்ளது.
இந்நிலையில் இந்த போட்டிக்காக ராஜ்கோட் விமான நிலையம் வந்த இங்கிலாந்து வீரர் ரெஹான் அகமது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு ஒருமுறை மட்டுமே வந்து செல்லும் விசா அளிக்கப்பட்டிருந்ததால் அவரை விமான நிலைய அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். பின்னர் பிசிசிஐ அதிகாரிகள் தலையிட்டு ரெஹான் அகமதுவை இந்தியாவுக்குள் நுழைய அனுமதித்துள்ளனர்.
மேலும் வேறு விசா விண்ணப்பிக்க சொல்லி இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு பிசிசிஐ அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. முன்னதாக இன்னொரு இங்கிலாந்து வீரரான சோயப் பஷீர் விசா காரணமாக இந்தியா வரமுடியாமல் முதல் டெஸ்ட் போட்டியைத் தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.